திருச்சி : கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு, கரூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், வாங்கல் உட்பட, பல்வேறு காவல் நிலையத்தில், 10 ரோந்து வாகனம் மூலம், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், 24 காவல் துறையினர், சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். இந்த ரோந்து வாகனங்களை, திருச்சி சரக டி.ஐ.ஜி.திரு. சரவணசுந்தர், தொடங்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது, கரூர்பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து , கண்ணாடிகள் உடைத்து பயணிகளை தாக்கிய, கலவரத்தில், 8 திருநங்கைகள் மீது காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட, 2 குற்றவாளிகளை கைது, செய்யப்பட்டுள்ளனர்.