கோவை : பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில், இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து காவல் ஆய்வாளர் திரு. கோபிநாத், உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு. பாரதநேரு, மற்றும் காவல் துறையினர், பல்லடம் ரோடு வடசித்தூர் பிரிவில் வாகன சோதனையில், ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். மேலும் வாகனத்தில், இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர், விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரக்கு வாகனத்தின் உரிமையாளர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சஜித் (27), டிரைவர் சஞ்சீவ் (33), என்பது தெரியவந்தது.
2 பேர் கைது மேலும் நெகமம் பகுதிகளில், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், சஜித், சஞ்சீவ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில், தொடர்புடைய பாலக்காட்டை சேர்ந்த நிதின் என்பவரை காவல் துறையினர், வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.