கோவை : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஆடத்தொறை சாலையில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, வாகனங்களில் கடத்தப்படுவதாக துறையினருக்கு, தகவல் கிடைத்தது. டி.எஸ்.ஓ., திரு. நந்தகுமார், உணவு பாதுகாப்பு துறை எஸ்.ஐ., திரு. தியாகராஜன் மற்றும் திரு. தஸ்லீம் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, ஆர்.ஐ., தீபக் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது, பதுக்கிவைத்திருந்த அரிசியை லாரியில் ஏற்றி கடத்த முயன்ற, பந்தலுார் சேரம்பாடி கோரோஞ்சாலை சேர்ந்த கவியரசன், (43), அத்திக்குன்னா உப்பட்டி பகுதியை சேர்ந்த ஜினேஷ், (29), ஆகியோர் காவல் துறையில், ஒப்படைக்கப்பட்டனர். அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தப்பட்ட, 2,500 கிலோ அரிசி, கூடலுாரை சேர்ந்த ஜோபின் என்பவரது வீட்டுக்கு கொண்டு செல்ல இருந்தது விசாரணையில், தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவத்தில், ஜோபின், ஜினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில், வெளியே வந்ததும் தெரியவந்தது. இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.