திருப்பத்தூர் : திருப்பத்தூர் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், இருந்து மைசூர் வரை செல்லும் ஹவுரா விரைவு ரெயிலில், சேலம் உட்கோட்ட ரெயில்வே காவல் சிறப்பு பிரிவு தனிப்படை காவல் துறையினரும், ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினரும் ஆம்பூர்-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் பொருட்கள் வைக்கும் இடத்தில், கேட்பாரற்றுக் கிடந்த பையை காவல்துறையினர், சோதனை செய்தனர். அதில் 7 பண்டல்களில் 8½ கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையில் , ஒப்படைத்தனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வேகாவல் ஆய்வாளர் திருமதி .இளவரசி, காவல் உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார், மற்றும் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.