கோவையை சேர்ந்த 4 பேர் தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், இதை வெளியே விற்றால் ரூ 1 கோடிக்கு விற்க்கலாம். எங்களுக்கு ரூ30 லட்சம் கொடுத்தால் விலைமதிப்புள்ள இரிடியம் கொடுப்பதாககூறினார்கள். இதை நம்பி மனோகரன் ரூ30 லட்சம் பணத்துடன் கோவைக்கு வந்தார். சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜ்க்குவருமாறு அந்த கும்பல் அழைத்தது. மனோகரன் பணத்துடன் லாட்ஜுக்கு சென்றார். அங்கு வைத்து அந்தகும்பல் ஒரு பையை அவரிடம் கொடுத்தது.
அதில் இருடியம் உள்ளது வீட்டில் போய் எடுத்து பாருங்கள் என்று கூறினார்கள். பையை பெற்றுக்கொண்ட மனோகரன், 30 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். இந்த பையை வழியில் வைத்து வெளியே எடுத்தால் போலீசார் பிடித்துக் கொள்வார்கள். வீட்டில் போய் தான் எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதை நம்பி வீட்டுக்குச் சென்று பையில் இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் செங்கல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மனோகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை சேர்ந்த முருகானந்தம், கண்ணப்பன், உட்பட 4 பேரை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம்ஆய்வு செய்து மோசடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.