கோவை : கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ், (53), இவர் கோவையில், உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், விளாங்குறிச்சி ஜீவாநகர் அருகே வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. அந்த மனையில் தற்காலிக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு மனைகளை விற்பனை செய்யும் புரோக்கராக, கோவை நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார்(எ)கென்னடி, (45), என்பவர் செயல்பட்டு வந்தார். கடந்த 9ம் தேதி ஜீவாநகர் வீட்டுமனை அலுவலகத்திற்கு வந்த ரவிக்குமார், மேலாளர் லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டிவிட்டு, அலுவலகத்தில் இருந்த, 82 லட்சம் ரூபாயுடன் தப்பி ஓடினார்.
மேலாளர் அளித்த புகாரின் பேரில், பீளமேடுகாவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ரவிக்குமார், மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் துறையினர், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 23 லட்சம் ரூபாய் பறிமுதல், செய்யப்பட்டது. ரவிக்குமார் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘குடும்ப சூழ்நிலை காரணமாக பலரிடம் கடன் வாங்கியிருந்தேன். கடன் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி நெருக்கடி கொடுத்தனர். எனக்கு போதிய வருமானம் இல்லை. நான் வேலை செய்யும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில், கொள்ளையடித்தேன். கொள்ளையடித்த பணத்தை கொண்டு, கடனை அடைத்தேன். காவல் துறையினர், தேடுவதை அறிந்ததும், பாலத்துறை பகுதியில் பதுங்கி இருந்தேன்’ என கூறியுள்ளார்.
மதுரையிலிருந்து ந