சென்னை : சென்னை, இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட, 61.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.33 கிலோ தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து, ‘இண்டிகோ’ விமானத்தில், மூன்று இலங்கை பெண் பயணியர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரும், சென்னை வந்தனர். சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், வெளியேற முயன்ற அவர்களை, விமான நிலைய சுங்க அதிகாரிகள், சோதனை செய்தனர்.அப்போது, அவர்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து, தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 61.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.33 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை புலனாய்வு அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த விமலாராணி, தையநாதன் மற்றும் ஜீவானி கூங்கே வர்ணகுலசூரியா ஆகிய இருவரை கைது செய்தனர்.