சென்னை : சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த, குணால்ஷா, மொபைல் போன் கடை நடத்துகிறார். இவர், காவல் ஆணையர், அலுவலகத்தில் அளித்த புகார். நான் 2016ல், புரசைவாக்கத்திலுள்ள, குருவாயூரப்பன் சிட் பண்ட் பிரைவேட் லிமிடெட், என்ற நிதி நிறுவனத்தில், தினமும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தேன். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த டேனிபாபு, என்பவர் பணத்தை பெற்றுச் செல்வார். அதற்கான ரசீதும் கொடுத்தார். சேமிப்புக்கான முதிர்வு காலம் முடிந்ததும், முதிர்வு தொகையை வாங்கச் சென்றேன். ஆனால், நான் குறிப்பிட்டபடி பணம் செலுத்தவில்லை. என, நிதி நிறுவன ஊழியர்கள் கூறினர்.
மேலும், நான் டேனிபாபுவிடம் ரூ.55 லட்சம் , செலுத்தியதாக கூறிய போது, பணம் வசூல் செய்த டேனிபாபு, வேலையை விட்டு, நின்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். அவரிடம் இருந்து என் பணத்தை, மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் ,வழக்கு பதிந்து, கேளம்பாக்கத்தில் பதுங்கி இருந்த டேனிபாபு, (36), என்பவரை பிடித்துவிசாரித்தனர். இதில், டேனிபாபு வேலையை விட்டு நின்றாலும், அந்த நிறுவனத்தின் ‘பில்’ புத்தகத்தை கொண்டு வந்து, அதன் வாயிலாக குணால் ஷாவிடம், மோசடி செய்தது தெரிந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், நேற்று கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.