சென்னை : சென்னை, வியாசர்பாடி, கரிமேடு முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி சுகன்யா, (43), இவர், வேளாங்கண்ணி என்பவருடன் சேர்ந்து, தீபாவளி பண்டு சீட்டு மற்றும் ஸ்கூல் ஏலச்சீட்டு நடத்தினார். அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி உள்ளிட்ட 25 பேர், இவர்களிடம் பண்டு, ஏலச்சீட்டில் சேர்ந்து, பணம் கட்டினர்.
ஆனால், சுகன்யா, வேளாங்கண்ணி ஆகியோர், குறித்த நேரத்தில் பணத்தை திருப்பி தராமல், ஏமாற்றினர். கடந்த 2018ல், வியாசர்பாடி காவல் துறையில், , 44 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதில், சுகன்யா, வேளாங்கண்ணி ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில், சுகன்யா அவர் வீட்டுக்கு வந்ததாக எம்.கே.பி., நகர் காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர், வீட்டில் இருந்த சுகன்யாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான வேளாங்கண்ணியை தேடி வருகின்றனர்.