மதுரை : மதுரை மாவட்டத்தில், காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினர் , மூலம் மீட்கப்பட்டு அவ்வப்போது உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு மாதத்தில் சைபர்கிரைம் மூலம் ரூ.4 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள 51 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த 51 செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு . சிவபிரசாத், வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, மதுரை புறநகர் காவல் நிலையங்களில், இதுவரை ரூ.1 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 850 மதிப்புள்ள 777 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோல், கடந்த ஒரு மாதத்தில், வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில், நடந்த திருட்டு வழக்குகளில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 730 கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கில், திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். குறிப்பாக வங்கி ரகசிய எண், வங்கிகணக்கு எண், ஓ.டி.பி. போன்ற விவரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில், ஆன்லைன் மோசடி தொடர்பாக 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம். மேலும், 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி