சென்னை : கிஷான் ரேஷன் ஷாப் என்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி சென்னையில் பருப்பு மொத்த வியாபாரியிடம் ரூ.3.65 கோடி மதிப்பிலான பருப்பு மற்றும் பயிறு வகைகளை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றிய வழக்கில் பாண்டியராஜன் என்பவர் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவினரால் கைது.
CCB team of Greater Chennai Police arrested Pandiarajan who cheated Rs.3.65 crore worth of pulses bought from a wholesaler in the name of a fake company called Kishan Ration Shop. சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் என்.ஆர்.பாலாஜி (வ/46) என்பவர் பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
என்.ஆர்.பாலாஜிக்கு அவரது நண்பர் மூலம் அறிமுகமான பாண்டியராஜன், ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிகரன் மற்றும் உமா ஆகியோர் கூட்டு சேர்ந்து ” கிஷான் ரேஷன் ஷாப் ” என்ற ரேசன் கடை போன்ற கடைகளை ஆரம்பித்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அதை சில்லரை விற்பனை செய்யப்போவதாகவும், மொத்த வியாபாரிகளிடமிருந்து பருப்பு போன்ற பொருட்களை கொள்முதல் செய்ய உள்ளதாக என்.ஆர் பாலாஜியிடம் கூறியுள்ளனர். மேலும் மத்திய அரசால் வழங்கப்பட்டது போன்ற போலியான ஒப்பந்த ஆணைகளையும் காண் பித்துள்ளனர். இதனை நம்பிய என்.ஆர்.பாலாஜி கடந்த மார்ச் 2021 ம் ஆண்டு முதல் மேற்படி நபர்களுக்கு சுமார் ரூ.3.65 கோடி மதிப்புள்ள பருப்பு மற்றும் பயிறு வகைகளை சப்ளை செய்துள்ளார்.
ஆனால் இது வரை மேற்படி நபர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து என்.ஆர்.பாலாஜி சென்னை பெருநகர் காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டடது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில் போலி ஆவண புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பாண்டியராஜன், திருவல்லிக்கேணி என்பவரை 05.04.2022 அன்று கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கிஷான் ரேஷன் ஷாப் என்பது மத்திய அரசின் நிறுவனம் என போலியாக ஆவணங்களை காண்பித்தும் பல கோடி மதிப்பிலான பருப்பு மற்றும் பயிறுவகைகளை கொள்முதல் செய்து அதற்கான தொகையை மத்திய அரசின் திட்டத்திலிருந்து 45 – நாட்களில் Bank Account- க்கு வந்துவிடும் என கூறி விருதுநகர், கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் உள்ள வியாபாரிகளிடம் ஏமாற்றிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.