கோவை : கோவை மே 12, வெளிநாடுகளில் இருந்து கொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்டவற்றுக்கு நன்கொடை வசூலிப்பதில், அந்நிய செலவாணி மோசடி நடந்திருப்பதாக, சி.பி.ஐ .விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட , இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. டெல்லி ,மும்பை, ராஜஸ்தான், மைசூர், சென்னை, கோவை, ஈரோடு. உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில், சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஒரு சில இடங்களில் நேற்று 2-வது நாளாகவும், இந்த சோதனை நடந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ,சேனாதி பாளையம் பகுதியை சேர்ந்த, ஆடிட்டர் வாகேஷ் (31), என்பவரை அந்நிய செலவாணி மோசடி வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இவர் கோவையில் உள்ள பிரபல தனியார், எலும்பு முறிவு மருத்துவமனையில் ஆடிட்டராக, பணியாற்றி வந்துள்ளார். அப்போது அந்த மருத்துவமனையின், வெளிநாட்டு பண பரிமாற்றத்துக்கான அனுமதியை நீட்டித்துக் கொடுப்பதற்காக டெல்லியை சேர்ந்த உள்துறை, அமைச்சக முன்னாள் அதிகாரி பிரமோத் குமார், என்பவரிடம் ஹவாலா பணமாக ரூ 2. லட்சத்தை லஞ்சமாக, வாகேஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் ஆடிட்டர் வாகேசை சி.பி.ஐ. நேற்று கைது செய்தனர். மேலும் தனியார் மருத்துவமனை நிர்வாகி மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கைதான வாகேஷ், நேற்று மாலை கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் மேலும் விசாரணை நடத்த இருப்பதால், டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி அளிக்குமாறு, கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர் .மனுவை விசாரித்த நீதிபதி, கோவிந்தராஜன் வருகிற 13-ஆம் தேதி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில், ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகள் வாகேசை டெல்லி, கொண்டு சென்றனர். அந்நிய செலாவணி மோசடியில், நாடு முழுவதும் 6 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல், செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆடிட்டர் கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.