சென்னை: சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த திரு. சீனிவாசன் என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், தான் சவுதி அரேபியாவில் சொந்தமாக டிரேடிங் பிசினஸ் செய்து வந்ததாகவும், கடந்த 2020 – ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது, தெரிந்த நண்பர் மூலமாக திருமதி. சுனிதா என்பவர் அறிமுகமானதாகவும், தன்னிடம் பணம் இருக்கும் விவரத்தையும், Covid – 19 காரணமாக ஏற்பட்ட முழு ஊரடங்கால் தான் மறுபடியும் வெளிநாடு செல்ல இயலாத சூழ்நிலையையும் தெரிந்து கொண்ட சுனிதா தன்னை அணுகி, அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.
மற்றும் நண்பர்கள் இணைந்து, சென்னை, சின்னமலை, காசாகிராண்ட் அபார்ட்மெண்டில் Sun Boutique Pvt Ltd and Koyambedu Finance Association Pvt Ltd ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி அதன்மூலமாக பல்வேறு டிரேடிங் பிசினஸ் செய்துவருவதாகவும், அவருடைய நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், ஓராண்டிற்குள் முதலீடு செய்த தொகையை 2 மடங்கு இலாபத்துடன் தருவதாகவும் , நிறுவனத்தில் தன்னை இயக்குநராக சேர்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி, தன்னிடமிருந்து 20.03.2020 முதல் 31.10.2020 வரையிலான காலத்தில் சிறுக சிறுக பல்வேறு தவணை முறையில் வங்கி பரிவர்த்தணை மற்றும் ரொக்கமாக ரூ.12,49.95,000/- மற்றும் 36 சவரன் தங்கநகைகளை பெற்றுக்கொண்டு.
அவர் சொன்னதுபோல் எந்தவித இலாபத் தொகையையும் தராமல் ஏமாற்றியதாகவும், மேலும் சுனிதா நடத்திவந்த Sun Boutique Pvt Ltd and Koyambedu Finance Association Pvt Ltd ஆகிய நிறுவனங்கள் போலியான நிறுவனங்கள் என்பதும், அந்த நிறுவனங்கள் கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை என்றும் இல்லாத ஒரு நிறுவனத்தை இருப்பதுபோல் போலியாக அலுவலகத்தை உருவாக்கி, போலியான ROC சான்றிதழ்களை தயாரித்து தன்னிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் அடிப்படையில் 23.02.2022-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி புலனாய்வு பிரிவில் (EDF) வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த திருமதி. சுனிதாவை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (மத்திய குற்றப்பிரிவு) திருமதி . தேன்மொழி , I.P.S. அவர்கள் வழிகாட்டுதலில், துணை ஆணையாளர் திருமதி.K.மீனா, அவர்கள் மேற்பார்வையில், கூடுதல் துணை ஆணையாளர் திரு.அசோகன் அவர்கள் அறிவுரையின்பேரில், ஆவண மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் திரு.ஜான்விக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திருமதி .சுனிதா (பெ/34) போரூர் என்பவரை 04.042022 அன்று கைது செய்தனர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.