கோவை : கோவை சேரன்மாநகரில், உள்ள இந்தியன் வங்கியில், பிரேம்குமார் என்பவர் மேலாளர் மற்றும் உஷா என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வந்தனர். கடந்தாண்டு, தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை அடகு வைத்து மோசடி, செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், கோவை நகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில், புகார் செய்தார். விசாரணையில், 3 கிலோ போலி நகைகளை அடகு வைத்து வங்கியின் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.1.30 கோடி. வங்கி மேலாளர் பிரேம்குமார், உதவி மேலாளர் உஷா, நகை மதிப்பீட்டாளர் உள்பட 12 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில், கண்டறியப்பட்டது. மேலும், போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதில், ரெஜி என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று இரவு பிரேம்குமார், உஷா கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.