மதுரை : காமராஜர் சாலை நவரத்தினபுரம் தெரு சந்தோஷ்குமார், நகைக்கடை நடத்துகிறார். தொழிலை மேம்படுத்த வங்கியில், கடன் பெற இவர் முயற்சித்து வந்தார். செல்லூர் மகாலட்சுமி (47), பழனிக்குமார் (37), ஆகியோர் வங்கி கடன் பெற்று தருவதாக கூறினர். அதை நம்பி சந்தோஷ்குமார் ரூ.ஒரு கோடியே 18 லட்சத்து 83 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் வங்கி கடன் பெற்று தரவில்லை. பணத்தை கேட்ட போது மிரட்டினர். மகாலட்சுமி, பழனிக்குமாரை காவல் துறையினர், கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி