சென்னை: திரு. வெங்கடேசன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரில் Ramya Outsourcing Solutions Pvt Ltd என்ற பெயரில் Man Power Agency நடத்தி வருகிறார். அவர் நடத்தும் Man Power Agency Ltd மூலம் 2012 ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரை மாதா மாதம் GST யும் கட்டி வந்துள்ளார். 2018 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு இறுதி வரை GST கட்ட முடியவில்லை என்றும், அது மொத்தமாக சேர்ந்து ரூ.4.75 கோடிகள் வரை பாக்கியாகி விட்டதாகவும், அதனால் GST Department ல் இருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெங்கடேசன் GST தொகையை கட்ட பணம் இல்லாததால் அவர் தனது ஆடிட்டர் மோகன் பாபு அறிவுறுத்தலின் பேரில் வெங்கடேசனின் GST பிரச்சனையை முடித்து தருவதாக தணிகைவேலுவை அறிமுகப்படுத்தியதாகவும், அப்போது தணிகைவேல் தனக்கு GST Department- ல் Commissioner தெரிந்தவர் என்றும் அவர் மூலம் வெங்கடேசனின் GST பிரச்சனையை முடித்து தருவார் என கூறி தீபக் கோத்தாரி என்பவரை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதன் பிறகு தீபக் கோத்தாரி, தணிகைவேல், மோகன் பாபு ஆகியோர்கள் சேர்ந்து வெங்கடேசனிடம் பணம் ரூபாய் 1 கோடி கொடுத்தால் GST பிரச்சனையை முடித்து தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு GST பிரச்சனையை முடித்து தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்தது சம்மந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 09.02.2022 ம்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி புலனாய்வு பிரிவில் ( EDF ) வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவர்களை கைது செய்ய வேண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி. தேன்மொழி இ.கா.ப, அவர்கள் வழிகாட்டுதலில், துணை ஆணையாளர் (மத்திய குற்றப்பிரிவு) திருமதி. K. மீனா, அவர்கள் ஆலோசனையின்பேரில், கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு. அசோகன் அவர்கள் அறிவுரையின் பேரில், ஆவண மோசடி புலனாய்வு பிரிவு ( EDF – 1 ) உதவி ஆணையாளர் திரு. ஜான்விக்டர் மேற்பார்வையில், ஆவண மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர் திருமதி.மேனகா தலைமையிலான தனிப்படையினர் தணிகைவேல் (வ/47) நங்கநல்லூர் மற்றும் தீபக் கோத்தாரி (வ/48) கீழ்பாக்கம் ஆகிய இருவரை 05.04.2022 அன்று செய்தனர். விசாரணையில் தணிகைவேல் அகில பாரத சத்திரிய மகா சபா என்ற அமைப்பின் மாநில பொருளாளராக இருப்பது தெரிய வந்தது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.