திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.குனசேகரன் அவர்களின் தலைமையில், போளூர் காவல் ஆய்வாளர் திரு.K.ஜெயபிரகாஷ், மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் தாலுக்கா, திமிரிமருதூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் வ/51 த/பெ பழனி என்பவரின் வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூபாய் 60,000 மதிப்புள்ள 4 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் எதிரி நடராஜன் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.