மதுரை : அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 6 லட்சம் மோசடி பெண்ணிடம் விசாரணை மதுரை மார்ச் 11 அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூபாய் 6 லட்சம் மோசடி செய்த மற்றொரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் அப்துல் ரகுமான் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி 64. இவர் தன் மகளுக்கு அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்
அப்போது அறிமுகமான வளர்நகர் அய்யனார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால் மனைவி வகிதா கௌசிகா என்பவர் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறியும் வேலை வாங்கி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். இவரது பேச்சை நம்பிய மகாலட்சுமி அவரிடம் ரூபாய் 6 லட்சம் கொடுத்து உள்ளார் .ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி