ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ஜல்லிமலையைச் சேர்ந்த, அந்தோணிசாமி; இவர் ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகம் அருகில் ஆத்திக்காடு, எனுமிடத்தில் வீடு கட்டுகிறார். இங்கு மதுரை அண்ணா நகர் சேர்ந்த, கூலித்தொழிலாளர்கள் கணேசன், கார்த்திகை முருகன், நேற்றுமுன்தினம் இரவு 12 மணி வரை, டைல்ஸ் கல் பதித்து விட்டு தூங்கினர்.
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், சிலர் இருவரது மொபைல் போன், சட்டை பையில் இருந்த ரூ. 5 ஆயிரம், வீட்டில் குடிநீர் பருக, வைத்திருந்த சில்வர் செம்பு, புதிய கதவு, இரு மின் ஒயர் பாக்கெட்டுகளை, திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும். ராமேஸ்வரம் டவுன் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.