இன்று பொன்முத்துபாண்டி கையெழுத்து போட வந்த போது, அவர் மீது வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட வந்த தனது மகனை போலீசார் கைது செய்து சென்ற விட்டதாகவும், தன் மகன் மீது வேண்டும் என்றே பொய்யான வழக்கு போடபடுவதாக கூறி பொன்முத்துபாண்டியின் தந்தை பரமசிவம் திடீரென கோவில்பட்டி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி பாரதிதாசன் முன்பு திடீரென மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் போலீசார் பரமசிவத்தினை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தனது மகன் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதாகவும், தன் மகனுக்கு ஜாமீன் எடுக்கவே சிரமப்பட வேண்டி இருப்பதாகவும், தனது மகனை சுட்டு கொன்று விட்டு, தங்களையும் கொன்றுவிட சொல்லுங்கள் என்கிறார் மகனுக்காக தீக்குளிக்க முயன்ற முன்னாள் இராணுவ வீரர் பரமசிவம் இது குறித்து போலீசார் தரப்பில் கேட்டபோது, பொன்முத்துபாண்டி மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தற்பொழுதும் ஜாமீனில் வந்த பிறகு வழிப்பறியில் ஈடுபட்டதாக வந்த புகார் வந்த காரணத்தினால் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை கண்டித்து முன்னாள் இராணுவ வீரர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.