துாத்துக்குடி : துாத்துக்குடி மூன்றாவது மைல், பகுதியை சேர்ந்த காளிபாண்டி என்பவர் மகன் மாரிமுத்து (20), திரு.வி.க., நகர் சண்முகசுந்தரம் என்பவர் மகன் மாரிமுத்து (23), திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் ஜெபசிங் (23), ரவுடிகளான மூவரும் நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மூன்றாவது மைல் மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தில், அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதில், அங்கேயே துாங்கி விட்டனர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திராவுக்கு சென்ற சரக்கு ரயில், இரு மாரிமுத்துகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.அவர்களுடன் இருந்த ஜெபசிங் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். மூவர் மீதும் கொலை, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.காவல் துறையினர் விசாரணை, நடத்தி வருகின்றனர்.