மதுரை: மதுரையில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் , எந்த மாதிரியான சூழ்நிலைகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என்று ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை விளக்கம் அளித்துள்ளார்,
சமூகத்தில் ரவுடிகள் கூட்டாக சேர்ந்து கொடூர கொலைகள் செய்யும் போதோ, பணம் பறிப்பதற்காக சிறுவர்களை கடத்தி கொலை செய்யும் போதோ மனித உரிமைகள் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை என்றும் அத்தகைய கொடூர ரவுடிகளை கைது செய்ய செல்லும் போது தற்காத்துக்கொள்ள, போலீசார் என் கவுன்டர் செய்தால் மட்டும் மனித உரிமைகள் பற்றி பேசுவது ஏன் என்றும் காவல்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்..! எத்தகைய சூழ்நிலையில் என்கவுன்டர் நடத்தப்படுகின்றது என்று ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை விளக்கம் அளித்துள்ளார்,