மதுரை: மதுரை ரயில்வே நிலைய சந்திப்பு நுழைவுவாயிலில் மயங்கி விழுந்த பெண் பலி மதுரை மார்ச் 14 செல்லூர் மீனாம்பாள்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி மீனா 34. இவர் நோய்வாய்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் மதுரை ரயில்வே நிலைய கிழக்கு நுழைவு வாயில் சந்திப்பு அருகே சென்ற போது மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அவரது சகோதரி பாண்டிச்செல்வி கொடுத்த புகாரில் திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி