திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.பாரி, ரயில்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகக் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
182 என்ற உதவி எண்ணை செல்பேசியில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கும் ரயில் பயணிகளை உடனே அணுகிப் பிரச்னைகளைத் தீர்த்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகக் கூடுதல் பெண் கமாண்டோக்கள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.