கரூர் : கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் (41), இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கார் வாங்குவதற்காக பள்ளப்பட்டியில், உள்ள ஒரு வங்கியில் ரூ. 4 லட்சத்து 47 ஆயிரம் கடன் பெற்று உள்ளார். இந்நிலையில் அந்த கடனை திருப்பி செலுத்தி வந்தார். இந்தநிலையில் ஹபீப்ரகுமான் மற்றும் அந்த கார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணவேல் (36), ஆகிய இருவரும் சேர்ந்து அந்த வங்கி மேலாளரின் கையெழுத்தை போட்டு அவற்றை அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சமர்ப்பித்து சான்றிதழ் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளர் வினோத்குமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மகாலட்சுமி, வழக்குப்பதிந்து, ஹபீப் ரகுமான், கிருஷ்ணவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.