.சென்னை: மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரால் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது.
அரசு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி போலியான பணிநியமன ஆணை கொடுத்து ஏமாற்றிய 4 நபர்கள் கைது.இந்திய உணவு கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய 2 நபர்கள் கைது.CCB Team arrested cracked series of Job Rocket cases.4 arrested for cheating with fake Govt appointment order.
2 arrested for cheating false promises to get employment in FCI and Railways.சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்த திருமதி. அமுதா உடன் பல புகார்தாரர்கள் கொடுத்த புகாரில் தனக்கும் தன்னை போன்று பல நபர்களுக்கு பள்ளி கல்வித்துறை மற்றும் பல அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடமிருந்து சுமார் ரூ.3 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு, போலியான பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் IPS அவர்களிடம் கொடுத்த புகாரின் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் புகார்தாரர்கள் சொன்ன விவரம் உண்மையென தெரியவர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் திருமதி. L. கலாராணி, அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு முக்கிய எதிரி 1) ரேணுகா (பெ/48) நன்மங்கலம் என்பவரை போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்த போது எதிரி ரேணுகா அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பள்ளி கல்வித்துறையில் ரேணுகா உயர் அதிகாரியாக உள்ளது போன்று போலி அடையாள அட்டையை தயார் செய்து வைத்து கொண்டு வேலை தேடும் அப்பாவி இளைஞர்களிடம் போலி அட்டையை காண்பித்து ஏமாற்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 – க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 3 கோடிக்கு மேல் பணம் பெற்று ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன்பேரில், எதிரி ரேணுகாவின் கூட்டாளிகளான 2) காந்தி (ஆ/54), சைதாப்பேட்டை 3) மோகன்ராஜ் (ஆ/32) நெற்குன்றம், 4) ராஜேந்திரன் (ஆ/33) தேனி மாவட்டம் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் எதிரிகள் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 100 க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களிடமிருந்து ரூ.3 கோடிக்கும் மேல் பணம் பெற்று அவர்களிடமிருந்து அசல் கல்வி சான்றிதழ்களை பெற்று கொண்டு KMC மருத்துவமனையில் வைத்து போலியாக மருத்துவ பரிசோதனை நடத்தியும், போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.
மோசடி செயலுக்கு பயன்படுத்திய சுமார் 100 – க்கும் மேற்பட்ட போலியான பணிநியமன ஆணைகள் மற்றும் போலியான அடையாள அட்டைகள், படித்த இளைஞர்களின் சுமார் 70 அசல் கல்விச் சான்றிதழ்கள், மோசடி பணத்தில் வாங்கிய 40 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம், தங்க நகைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் 23 லட்சம் மதிப்பில் முதலீடு செய்த சொத்து ஆவணம் மற்றும் எதிரி மோகன்ராஜ் போலி அடையாள அட்டை மற்றும் 100 க்கும் மேற்பட்ட போலி பணி நியமன ஆணை தயாரிக்க பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் ஐபேட் ஆகியவைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் மோசடி செயலுக்கு எதிரிகள் பயன்படுத்திய 10 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு, அதில் ரூ.5 லட்சம் பணம் கையகப்படுத்தப்பட்டது.
சிறப்பான முறையில் புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் திருமதி.கலாராணி மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திருமதி.திவ்யா என்பவர் கொடுத்த புகாரில் 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் ரூ.88 லட்சத்திற்கு மேல் பணத்தை வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமலும், பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் உள்ள விவரம் உண்மையென தெரியவர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்களின் உத்தரவுப்படி புலன் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, எதிரிகள் தனியார் சட்டக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் சாந்தி (பெ/45) வடபழனி, மற்றும் பக்தவச்சலம் (ஆ/43), செங்கல்பட்டு மாவட்டம் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் எதிரிகள் இந்திய உணவு கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 17 நபர்களிடமிருந்து ரூ.88 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்று கொண்டு, மோசடி செய்தது தெரிய வந்தது. மோசடி செய்த பணத்தில் வாங்கிய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.
சிறப்பான முறையில் புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
மேலும் பொதுமக்கள் யாரும், இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வழங்குவதில்லை. வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும், வேலைக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்புக்கொண்டு விண்ணப்பிக்க கூடிய வேலைக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.