அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள, சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், தனது உதவியாளருடன் கிராம ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அப்பகுதி வழியாக, மொபட்டில் 4 மூட்டைகள் மணல் ஏற்றிக்கொண்டு, வந்த சோழமாதேவி கீழத்தெருவை சேர்ந்த, நடராஜன் (62), என்பவரை தடுத்து விசாரித்தபோது, அரசு அனுமதி இன்றி மணல் எடுத்து, வந்தது தெரியவந்தது. அந்த இடத்திலேயே, மணல் மூட்டை மற்றும் மொபட், ஆகியவற்றை விட்டுவிட்டு நடராஜன், தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், தா.பழூர்காவல் துறையில், கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, மொபட்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.