கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உதகை சாலையில், 3-வது கொண்டை ஊசி வளைவில், 40 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார். மேலும், சிறுமி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் யோபேஷ், இவர் தனது தந்தை ஜோஸ் (65), மகள் அம்மு (9), உறவினர்கள் தாமஸ், மற்றும் ஜார்ஜ், ஆகியோருடன், சில நாட்களுக்கு முன்பு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு, வழிபாட்டிற்காக சென்றிருந்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்றிரவு 5 பேரும் காரில், வயநாட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். யோபேஷ், காரை ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உதகை சாலையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 40 அடி ஆழ பள்ளத்தில், கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜோஸ் சம்பவ இடத்திலேயே, உயிரிழந்தார். மேலும், யோபேஷ், அவரது மகள் அம்மு, தாமஸ், ஜார்ஜ், உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியாக சென்ற, வாகன ஓட்டிகள், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு, தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை, மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் , அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த ஜோஸின், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு, செய்து விசாரித்து வருகின்றனர்.