தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருகிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள்,குட்கா,லாட்டரி சீட்டுகள் போன்றவை விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ் பாபு அவர்களின் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் இருந்த போது.
சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த பூலாங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகனான லோக பாக்கிய செல்வன்(31), ஆலங்குளத்தை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரின் மகனான முருகன் (44), குருவன் கோட்டையைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் கருவேலம் (41) மற்றும் நடராஜன் என்பவரின் மகன் மதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து லோக பாக்கிய செல்வன், முருகன் மற்றும் கருவேலம் ஆகிய நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,65,624 மதிப்பிலான 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது..