சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் தமிழக காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகம் 07.06.2018மற்றும் 08.06.2018ம் தேதிகளில் வீட்டை விட்டு பிரிந்த மூன்று நபர்களை அவர்களின் உறவினரிடம் சேர்த்து வைத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட மங்கல்¸ காட்டுன்¸ ஆர்னாப் டோலு ஆகியோர் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். சிகிச்சையின் பலனாக தங்களது முகவரி குறித்து சில தகவல்களை காப்பகத்தில் தெரிவித்த நிலையில் மாநில குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் திருமதி.தாஹிரா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் அவர்களின் தீவிர முயற்சியால் இருவரின் சொந்த மாநிலமான உத்திர பிரதேசம் மற்றும் ஒருவரின் சொந்த மாநிலம் மேற்கு வங்கம் ஆகிய மாநில காவல்துறையை தொடர்பு கொண்டு அவர்களின் உறவினர்களை கண்டுபிடித்து ஒப்படைத்தார். அவர்களில் மங்கல் 22 வருடத்திற்கு பிறகும்¸ காட்டுன் 7 வருடத்திற்கு பிறகும்¸ ஆர்னாப் டோலு 6 வருடத்திற்கு பிறகும் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காணாமல் போனவர்களை ஒப்படைத்த காவல் ஆய்வாளர் திருமதி.தாஹிரா அவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.