காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் கைது. காஞ்சிபுரம் உட்கோட்டம், விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாரதலட்சுமி ( 65 ), க / பெ.ராமாராவ், எண்.16 E, ரெட்டிபேட்டை தெரு, உப்புக்குளம், சின்ன காஞ்சிபுரம் என்பவர் 12.03.2022 அன்று 08.30 மணிக்கு வீட்டிலிருந்து காஞ்சிபுரம் தேவகி சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சலீம் பிரியாணி கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி நபரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் சுமார் 15 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காரில் தப்பிசென்றுவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக துரிதமாக எதிரிகளை விசாரணை மேற்கொண்டு பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், திரு.ஜீலியஸ் சீசர், காவல் துணை கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் உட்கோட்டம் அவர்களின் மேற்பார்வையில், திரு.பரந்தாமன், காவல் ஆய்வாளர், சுங்குவார் சத்திரம் காவல் நிலையம் மற்றும் திரு.செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அவர்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொண்டதில் 1 ) தக்கி அலி ( 38 ) த / பெ.யூசுப் அலி, சித்தரி ரோடு, உசைனி காலனி, போடர்சிட்டி,கர்நாடக மாநிலம்,2 ) அஸ்ரதுல்லா காண்வி ( 32 ), த /பெ.அப்சர் அலி, காந்தி கட்ச் போடர்சிட்டி கர்நாடக மாநிலம் மற்றும் 3 ) சையது அப்பாஸ் ( 22 ), த / பெ.குலாம் அலி, போடர்சிட்டி, கர்நாடக மாநிலம் ஆகியோர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரியவந்ததையடுத்து மேற்படி மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச் சம்பவத்தில் பயன்படுத்திய கார் மற்றும் களவுபோன 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் தனிப்படையினரை வெகுவாகப் பாராட்டினார்.