கோவை : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த, அகிலன் (33), இவர் வனத்துறையில் வனவராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி மதன்குமார் (27), தனியார் நிறுவனத்தில் ஊழியராக, வேலை பார்த்து வந்தார். மதன்குமார் தாராபுரத்தில் இருந்து வாரம் ஒரு முறை, வந்து மனைவியை பார்த்து விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் அண்ணன் அகிலனும், அவரது தம்பி மதன்குமார் தேவிபட்டினம் வந்துவிட்டு, நேற்று மாலை மீண்டும் தாராபுரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் வேட்டைக்காரன், புதூரை சேர்ந்த மோகன் குமார் (22), அவரது நண்பர்கள் மலரவன், மணிகண்டன், ஜெகதீசன், ஆகியோர் 2 மோட்டார் சைக்கிள்களில், வேட்டைக்காரன் புதூரில் இருந்து காளியாபுரம் நோக்கி வேகமாக சென்றனர். அவர்கள் காளியாபுரம் பிரிவு, அருகே வந்த போது அகிலன் வந்த மோட்டார் சைக்கிளும், மோகன்குமார் அவரது நண்பர்கள் வந்த மோட்டார் சைக்கிளும், நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் 3 மோட்டார் சைக்கிளில், வந்த 6 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த அகிலன், அவரது தம்பி மதன்குமார், மற்றும் மோகன் குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே, துடிதுடித்து இறந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு, போராடிக் கொண்டிருந்த மலரவன், மணிகண்டன், ஜெகதீஸ் ஆகியோரை பொள்ளாச்சி அரசு மருத்துவனைக்கு, அனுப்பி வைத்தனர் . ஆபத்தான நிலையில் இருந்த ஜெகதீஷ், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், இறந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆனைமலை, காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
