மதுரை : வாடிப்பட்டி, சமயநல்லுார் கட்டப்புளி நகர் செல்லப்பாண்டி மகன்கள் சோணைமுத்து (33), சத்யபிரகாஷ், சமயநல்லுார் மெயின் ரோட்டில், கடை வைத்துள்ளனர். இவர்களுக்கும், பர்மா காலனி கார்த்திக் (27), குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் கார்த்திக், அவரது தம்பி கவுதம் , கடையில் இருந்த சோணைமுத்துவை, கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். கார்த்திக்கை கைது செய்த காவல் துறையினர், கவுதமை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி