மதுரை : மதுரை உட்பட தென்மாவட்ட , காவல் நிலையங்களில், கொலை மிரட்டல், மணல் திருட்டு, உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக சிலர் மீது காவல் துறையினர் , வழக்குப் பதிந்தனர். அவர்கள் முன்ஜாமின் அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதி பி.வேல்முருகன் மனுதாரர்கள் மீது வழக்குப் பதிந்தும் அவர்கள் சுதந்திரமாக உலாவுகின்றனர். அவர்கள் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யும்வரை ஏன் காவல் துறையினர் , கைது செய்யவில்லை. மனுதாரர்களை காவல் துறையினர் , கைது செய்து (மே 26) ஆஜர்படுத்த வேண்டும் என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி