காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி பின்வருமாறு எடுத்துக் கொண்டனர். முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி “இந்திய குடிமகன் / குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில், நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில், முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்”.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்