திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், பொதுமக்கள் தங்கும் இடத்தில், நேற்று முன்தினம், (70), வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து, பெரியகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் குமார், திருவள்ளூர் டவுன் காவல் துறையில், புகார் அளித்தார். இதன்படி, காவல் துறையினர், முதியவரின் உடலை மீட்டு, அரசு மருத் துவமனையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, விசாரித்து வருகின்றனர்.