அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் மேலவெளி செக்கடி, தெருவை சேர்ந்தவர் முருகேசன் (65), இவர் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள, மாரியம்மன் கோவில் திருவிழாவை, காண சென்றார். அப்போது சில வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு, ஏற்படுத்தும் வகையில் விசிலடித்து, கொண்டு இருந்தனர். இதனை கண்ட முருகசேன் அந்த வாலிபர்களை, தட்டி கேட்டு உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம், காவல் நிலையத்தில் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வேல்முருகன், ஜோதிமணி, சண்முகம், தண்டபாணி, கதிரவன், ரஞ்சித் ஆகிய 6 பேர் மீது காவல் துறையினர், கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.