கன்னியாகுமரி : குமரி மாவட்டம் நாகர்கோவில், ராமவர்மபுரம் பகுதியைச் சேர்ந்த, கிருஷ்ணன் செட்டியார் (71), ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), இவர், கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் கார் ஓட்டுநராக, வேலை பார்த்து வருகிறார். கார்த்திக், கிருஷ்ணன் செட்டியாருக்கு உறவு முறையில் பேரன் ஆகும். இதனால் கார்த்திக் அடிக்கடி, தாத்தாவிடம் செல்போனில் பேசி வந்தார். மேலும் கார்த்திக், தாத்தாவிடம் செலவுக்கு, பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்தார். ஆனால் கிருஷ்ணன் செட்டியார், பேரனுக்கு பணம் கொடுக்கவில்லை. இதையடுத்து கார்த்திக் சென்னையில், இருந்து நாகர்கோவிலுக்கு வந்தவர் ,கிருஷ்ணன் செட்டியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பணம் கொடுக்காததால், ஆத்திரத்தில் இருந்த கார்த்திக் திடீரென தான் மறைத்து வைத்திருந்த, கத்தியால் தாத்தாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில், கிருஷ்ணன் செட்டியார் மயங்கி விழுந்தார். இதையடுத்து கார்த்திக், அங்கிருந்து தப்பியோடினார். கத்திக்குத்து காயத்துடன் இருந்த கிருஷ்ணன் செட்டியாரை மீட்டு சிகிச்சைக்காக, மருத்துவமனையில், கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருஷ்ணன் செட்டியார், கோட்டார் காவல் துறையில், புகார் செய்தார். புகாரின்பேரில் கார்த்திக் மீது வழக்குப்பதிவு, செய்து அவரை கைது செய்தனர்.