மதுரை : ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி முதியவரிடம் 85 லட்சம் மோசடி 3 பேரிடம் போலீஸ் விசாரணை மதுரை மார்ச் 19 ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி முதியவரிடம் ரூபாய் 85 லட்சம் ஏமாற்றியதாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரைகலை நகர் விரிவாக்கம் பல்லவி நகர் முதல் தெரு சேர்ந்தவர் ரசேல்ரெஷி டேனியல் 60. இவரிடம் மதுரை வடக்குவெளி வீதியை சேர்ந்த சதீஷ்குமார், கலைநகர் பல்லவி நகர் முதல் தெரு சேர்ந்த சிவகாந்தன், பீசண்ட்ரோட்டை சேர்ந்த செல்வின் இவர்கள் மூவரும் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூபாய் 85 லட்சம் பெற்றுள்ளனர். இந்தத் தொகையை 2011 ஆம் ஆண்டு முதல் வாங்கி ஏமாற்றியுள்ளனர். .இதுகுறித்து ரசேல்ரீஷிடேனியல் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்கள் 3 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.