கோவை : முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் இடங்களை, ஐ.ஜி., நேற்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் திரு, ஸ்டாலின், இன்று மதியம் கோவையில் இருந்து புறப்பட்டு, ஊட்டி செல்கிறார். செல்லும் வழியில், காளப்பட்டி, கோவில்பாளையம், அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின், வரவேற்பை ஏற்கிறார். இதையடுத்து நேற்று மாலை மேற்கு மண்டல ஐ.ஜி., திரு. சுதாகர், கோவை ரூரல் எஸ்.பி., திரு. பத்ரி நாராயணன், ஆகியோர், கோவில்பாளையத்தில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் இடத்தை, ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அன்னுார் கைகாட்டியில் மேடை அமைக்கப்பட்டுள்ள, இடத்தை ஆய்வு செய்தனர். அன்னுார் காவல் துறையினருக்கு, அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு மேட்டுப்பாளையம், புறப்பட்டுச் சென்றனர். அன்னுார் கைகாட்டியில் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின், வாகனங்களை நிறுத்த, சத்தி ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள காலி இடம் சமன்படுத்தப்பட்டுள்ளது.