திருச்சி : மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராமன், (57), ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சமூக வலைதளமான டுவிட்டரில், முதல்வர் திரு. ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் சிலரையும், தி.மு.க.,வையும் தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மாசிலாமணி, (58), மயிலாடுதுறை காவல் துறையில், புகார் அளித்தார். காவல் துறையினர், விசாரணை நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். விஜயராமனை கைது செய்து, நீதிமன்றத்தில் , ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.