மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் , உச்சிப்புளி அருகே கும்பரம் ஏ.டி.நகரை சேர்ந்தவர் சேதுராமன் (51), மீன்பிடி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த நாகுச்சாமி மகன் சுப்பிரமணியன் (29), என்ற வாலிபர் அப்பகுதியில், ஒரு பனை மரத்தில் பனங்கள் விலைக்கு வாங்கி குடித்து வந்தார். அவர் குடித்து போக மீதமாகும் கள்ளை சேதுராமனுக்கு சில நேரங்களில், கொடுத்து வந்தார். சுப்பிரமணியனுக்கு தெரியாமல் அந்த பனையில், கள் இறக்கி சேதுராமன் குடித்துள்ளார்.
இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக சேதுராமன் குடித்ததால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டிற்கு சென்று தனியாக இருந்த சேதுராமனை வெட்டிக்கொலை செய்தார். உச்சிப்புளி காவல் துறையினர், சுப்பிரமணியனை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி