திண்டுக்கல்: 15.03.2022 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானா பகுதியில் இன்று சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப, அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களும் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன் அவர்களும் போக்குவரத்து காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், மற்றும் மாவட்ட போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா