மதுரை: மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K மணி, காவல் ஆய்வாளர் திருமதி.சார்மிங் S.ஒய்ஸ்லின் மற்றும் மூன்று சார்பு ஆய்வாளர்கள், எட்டு காவல் ஆளினர்களுடன் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழிகாட்டுதலின் படி, மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் புகாரில் கடந்த இரண்டு வாரங்களில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் ரூபாய் 3,74,000/-மதிப்புள்ள 25 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று 05. 03.2022ம் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 84,68,350/-மதிப்புள்ள 626 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் கடந்த ஐந்து மாதங்களில் ரூ.5,68,500/-மற்றும் இதுவரை ரூ.24,14,636/-உரியவருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபோன்ற மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கிக் கணக்கு எண், CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், மேலும் பணம் இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் Investment App -களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதி நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் loan App-களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபரிகளிடம் இருந்து வரும் Video Call ஐ attend செய்ய வேண்டாம் என்றும் யாரனும் ஏமாறும் நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும் http://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் கள்