சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தின் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிக்கான மாநாடு 4ஆண்டுகளுக்கு பிறகு 3 நாள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இதன் நிறைவு நாள் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என பெருமிதம் தெரிவித்தார். மக்களுக்கான திட்டங்கள் அவர்களை சென்றடவதை உறுதி செய்வது, களப் பணியாளர்கள் என்ற அளவில் ஆட்சியர்களின் தலையாய கடமையாகும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
சிறந்த காவல்நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறந்த மாவட்ட ஆட்சியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களில், அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜியா-உல்ஹக் முதலிடமும், கன்னியாகுமரி எஸ்.பி ஸ்ரீநாத் இரண்டாம் இடமும், சிவகங்கை எஸ்.பி ராஜசேகரன் மூன்றாம் இடமும் பெற்று விருது பெற்றனர்.
சிறந்த காவல் ஆணையருக்கான விருதினை, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனுக்கு முதலமைச்சர் வழங்கினார். சிறந்த மாநகராட்சிக்கான விருதை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பெற்றார்.