திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில், மதுபான புட்டிகளை பயன்படுத்திவிட்டு காலிபுட்டிகளை சாலையோரங்களிலோ, விளைநிலங்களிலோ, வனப்பகுதியிலோ, மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலோ போடுவதை தவிர்க்கும் பொருட்டு, கொடைக்கானலில் இயங்கி வரும் 9 மதுபான விற்பனை கடைகள் மற்றும் ஆடலூரில், செயல்படும் 1 மதுபான விற்பனை கடை ஆகியவற்றில், விற்பனை செய்யப்படும்
மதுபானபுட்டிகளுக்கு வாடிக்கையாளர்கள் அரசு நிர்ணய விலையை விட ரூ.10/- கூடுதலாக செலுத்தி, பின்பு காலி மதுபானபுட்டிகளை மதுபானக் கடைகளில், திரும்ப ஒப்படைத்து பெற்றுக் கொள்ள வேண்டும். என்றும், (15.06.2022) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.