ஈரோடு: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. C. கதிரவன் அவர்கள், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சக்தி கணேஷ் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்ததோடு, காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். மேலும் காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னிமலை பகுதியில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவருக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ் பரிந்துரையின்படி, காவல் ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்களுக்கு சுதந்திர தினத்தில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நற்சான்றிதழ் பெற்ற காவல் ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா