கடலூர்: கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூர் சில்வர் பீச்சில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கார்ஸ் கிளப் தலைவர் சக்திவேல் வாழ்த்தி பேசினார்.
இதைத் தொடர்ந்து 10 பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணாடம், சிதம்பரம், பண்ருட்டி, தொழுதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 400–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார். முடிவில் தலைவர் சரவணன் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூர் நடராஜன் மற்றும் துணை செயலாளர் செல்வகுமார் ஆகியோர் செய்து இருந்தனர். வெற்றிபெற்ற மாணவ–மாணவிகளுக்கு வருகிற 16–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.