இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.எம்.இலந்தைகுளத்தை சேர்ந்த தலைமைக் காவலர் திரு.நீலமேகம் என்பவர் 29.07.2019-ம் தேதி மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார்.
இந்த தகவலை அறிந்த உடன், இவருடன் கடந்த 2002-ம் ஆண்டு மணிமுத்தாறு காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 500 காவலர்கள் (2002 – பேட்ஜ்) ஒன்றிணைந்து, 07.08.2019-ம் தேதி ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் திரட்டி தலைமை காவலர் திரு.நீலமேகம் அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கினார்கள்.
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதால் மனிதநேயம் என்றும் மரத்துப் போகாது. இதுவே எங்களுடைய முதல் முயற்சியாகும் என கண்ணீருடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்தனர்.