செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27, முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட், போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் தனியார் திருமண மண்டபம் , ஒன்றில் மாவட்ட மது விலக்கு இணை கண்காணிப்பாளர் திரு. துரைப்பாண்டியன், தலைமையில் மாமல்லபுரம் டி.எஸ்.பி திரு. ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் திரு. ருக்மாங்கதன், முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உள்ளூர் ஆட்டோ ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஏராளமானோர், கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமல்லபுரம், டி.எஸ்.பி. திரு.ஜெகதீஸ்வரன், பேசும்போது, ஆட்டோ ஓட்டுனர்கள், காக்கி சீருடை அணிவது கட்டாயம், அவரவர் ஆட்டோக்களில் , உரிமையாளர் பெயர், மற்றும் செல் நம்பர் எழுத வேண்டும். தன்னுடைய பெயர் பேட்ஜ் சர்ட்டில், கட்டாயம் இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, ஆட்டோ ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டுபவர்கள் பற்றி தகவல் வந்தால், அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டவர், ஆட்டோவில் பயணம் செய்யும் நேரங்களில், எவரேனும் அபின், எராயின், கஞ்சா ,போன்ற உயர்ரக போதை பொருட்கள் கேட்டால், மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு உடனடியாக, தகவல் தரவேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் தலை முடிகளை, நேர்த்தியாக வெட்டி, காதில் கடுக்கன் போன்ற கம்மல்கள், போடாமல் மற்றவர்கள் மதிக்கத்தக்க வகையில் “ஜென்டில்மேன்” போன்று இருக்க வேண்டும்.
இரண்டு ஆட்டோ, சங்கங்களின் உறுப்பினர்களும் தங்களது, விபரங்களை ஒரு வாரத்தில் மாமல்லபுரம் காவல் நிலையத்தில், ஒப்படைக்க வேண்டும். தினமும் தவறாமல் யூனிபார்ம் போடும் உள்ளூர், ஆட்டோ டிரைவர் ஒருவரை “ரோல் மாடலாக” காண்பித்து அவரை மாமல்லபுரம், டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர், உள்ளிட்ட காவல்துறையினர் பாராட்டினர்.